டெல்லி: நாட்டில் பொம்மை இறக்குமதி பெருமளவில் குறைக்கப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021-22 -ம் நிதியாண்டில் 109.72 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 326.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
