பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசேடமாக பாடசாலை அப்பியாச புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலை அப்பியாச புத்தகங்களில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க விற்பனை செய்த சில வர்த்தகர்கள் தற்போது பதுளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரி கூறினார்.
விசேடமாக பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெற்றோர்கள் பலர் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவற்றை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.