புறக்கணியுங்கள் : பெண்களுக்கு வினோதினி கொடுத்த அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை வினோதினி வைத்தியநாதன். சமீபகாலங்களில் அப்பாவோடு சேர்ந்துகொண்டு சமூக பார்வையோடு நகைச்சுவையாக அவர் வெளியிட்டு வரும் ரீல்ஸ் வீடியோக்களை பலரும் ரசித்து வருகின்றனர். அண்மையில் கூட இந்தியாவில் நிலவி வரும் அரசியலை நாசூக்காக ட்ரோல் செய்து அவர் வெளியிட்டிருந்த வீடியோ அதிகம் வைரலானது.

இந்நிலையில், அவர் தற்போது பெண்களை தைரியப்படுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவிடம் 'அப்பா பெண்களின் புகைப்படங்களை தவறாக மார்ப் செய்து மிரட்டினால் என்ன செய்வது? பெண்கள் தாங்களாகவே தனிமையில் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை காதலனோ மற்ற ஆணோ வைத்து மிரட்டினால் என்ன செய்வது? என்ற இரண்டு கேள்விகளை கேட்கிறார். அதற்கு வினோதினியின் தந்தை வைத்தியநாதன் 'இக்னோர்' (புறக்கணியுங்கள்) என்று சிம்பிளாக பதில் சொல்கிறார்.

அந்த பதிவின் கேப்ஷனிலும், 'அலட்சியம் என்ற கவசத்தால் உங்களை மேம்படுத்துங்கள். தூய்மையும் கற்பும் மனதில் தான். உடலில் அல்ல. இதற்கு ஒரு முன் உதாரணத்தை கொண்டு வர விரும்பினோம். அதற்காக தான் தீவிரமான இந்த பிரச்னை குறித்து தீவிரமான இந்த ரீல் வீடியோ' என்று குறிப்பிட்டிருக்கிறார். வினோதினியின் இந்த பதிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாசிட்டிவான கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.