ஷாம்லி : உத்தர பிரதேசத்தில் 21 வயது பெண்ணைக் கடத்திச் சென்று, ஆபாச ‘வீடியோ’ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டம், கைரானா கிராமத்தில் வசிக்கும் 21 வயது பெண்ணை, அதே கிராமத்தைச் சேர்ந்த ஹாரூன், 50, என்பவர் கடத்திச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், ஹாரூனின் வீட்டிற்கு சென்று தங்களது மகள் காணாமல் போனது குறித்து கேட்டபோது தாக்கப்பட்டனர். இது குறித்து பெண்ணின் தந்தை கைரானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
விசாரணையில் பெண்ணை கடத்திச் சென்றவர்கள் ஆபாச வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஹாரூன், அவரது சகோதரர் அப்பாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது, ஆள் கடத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement