உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு இக்கோயிலில் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் திருடு போனது.
இது குறித்து விசாரித்து வந்த போலீசார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சோபா துரைராஜன் என்பவரது வீட்டில், பழங்கால சிலைகள் இருப்பதை கண்டறிந்து, 7 சிலைகளை கைப்பற்றினர்.
அதில் 3 சிலைகளில் ஆதிகேசவ பெருமாள் கோயில் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால், அவற்றை பொதுமக்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர். பின்னர், கோயிலில் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.