கடந்த நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்ததற்கான காரணம் கடும் குளிர் நிலை ஆகும் என்று ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விலங்குகள் தொற்றுநோய் காரணமாக இறக்கவில்லை மாறாக, கடுமையான குளிர் நிலை காரணமாக இறந்துள்ளன என்று அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக வெப்பத்துடனான காலநிலைக்கு பழக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் உள்ள கால்நடைகளுக்குஇ திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினை (குளிரை) தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை குறிப்பிடுவதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவின் பேரில் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் இந்த விலங்குகள் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறையான விசாரணையின் அறிக்கை நேற்று (13) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக பசுக்கள், மாடுகள், எருமைகள், ஆடுகள் என சுமார் 1,660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன்இ மேலும் பல விலங்குகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அத்தரவுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.