2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு இரத்மலானை நீர் வழங்கல் சர்வதேச கேட்போர் கூடத்தில் இன்று (14) பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும். இன்று முதல் 16 ஆம’ திகதி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
குடிநீர் தொடர்பான நூற்றுக்கும் அதிகமான புத்திஜீவிகளும் பொறியியலாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்..
48 நாடுகளின் நிபுணர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
மாநாடு இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.