கோல்கட்டா,:மேற்கு வங்கம் பிர்புமில் நடந்த வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தற்கொலை செய்த விவகாரத்தில், ஏழு சி.பி.ஐ., அதிகாரிகள் மீது, மாநில போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிர்புமில் கடந்த மார்ச் மாதம் வன்முறை வெடித்தது. இதில், ௧௦ பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லாலோன் ஷேக் என்பவரை, சி.பி.ஐ., கைது செய்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ., காவலில் இருந்த அவர், பிர்புமில் உள்ள சி.பி.ஐ., தற்காலிக அலுவலகத்தில் சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதையடுத்து, ஏழு சி.பி.ஐ., அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ., சித்ரவதை செய்ததால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை சி.பி.ஐ., அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement