Pension Hike: ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் அதிகரிப்பு! நல்ல செய்தி சொன்ன ஆந்திர மாநில அரசு

Social Pension  Scheme: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சித் தரும் முடிவை எடுத்துள்ளது.  ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஓய்வூதியத் தொகையை 10 சதவீதம் உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மாநிலத்தில் தற்போதுள்ள சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்.

130.44 கோடி கூடுதல் சுமை 
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இந்த மாதம், இந்தப் பட்டியலில் மேலும் 2.43 லட்சம் பேர் இணைவார்கள். இந்த ஓய்வூதியதாரர்கள் அனைவரும் புத்தாண்டு அதாவது 2023 ஜனவரி தொடங்கியதும், அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 

இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த ஓய்வூதிய மாற்றத்தால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.130.44 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

65 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்று பலரும் அரசின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஓய்வூதிய தொகையில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதுள்ள சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுகள்
ஓய்வூதிய அதிகரிப்புத் தவிர, மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான ‘பம்ப்டு ஸ்டோரேஜ்’ மற்றும் நீர்மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேச பம்ப்டு ஸ்டோரேஜ் எலக்ட்ரிசிட்டி மேம்பாட்டுக் கொள்கை-2022 க்கும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஒருங்கிணைந்த எஃகு ஆலையை அமைப்பதற்கான JSW ஸ்டீல் லிமிடெட் மற்றும் மாநிலத்தில் மொத்தம் 1,600 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ ஸ்டோரேஜ் திட்டங்களை அமைப்பதற்கான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ஆகியவற்றின் முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பல மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்து அறிக்கை அளித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்பிஎஸ் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.