தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் இப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் எளிமையான முறையில் நடத்தப்பட்டது.
Thalapathy vijay:அந்த ஒரு விஷயத்திற்கு விஜய் ரொம்ப பயப்படுவார்..எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன சீக்ரட்..!
இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் நடிகர் அர்ஜுனும் கலந்துகொண்டதாக தெரிகின்றது. இதன்முலம் இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்கின்றார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் விஜய் தன் ரசிகர்களை திடீரென சந்தித்தார். மூன்று மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை தன் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய்.
இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டமாக சில மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை செய்துள்ளாராம் நடிகர் விஜய்.
அதாவது, படத்தின் வெளியீட்டின்போது ஒட்டப்படும் போஸ்டர்களில் அரசியல் சார்ந்த வசனங்களை உபயோகிக்கவேண்டாம் என்றும், பாலபிஷேகம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டாராம் விஜய். இதை வாரிசு படத்தின் வெளியீட்டில் ரசிகர்கள் கடைபிடிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்