அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்


அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (15.12.2022) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொது மக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்.

பொது மக்களுக்கான சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச ஊழியர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாது.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல் | Government Worker Sri Lanka Government Staff

சட்டங்கள் மற்றும் சட்டக் கோவைகளை கேடயமாக பயன்படுத்தல்

அத்துடன் அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக் கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அரச அதிகாரிகள் திறமையாக செயற்பட வேண்டும், எனக்கு காரணங்கள் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.