புதுடில்லி, :அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பழைய ‘வீடியோ’ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ௯ம் தேதி நடந்த இந்த சம்பவம், தற்போது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சீன வீரர்களை நம் வீரர்கள் விரட்டியடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆனால், இது கடந்தாண்டு அக்டோபரில் சீன ராணுவம் அத்துமீற முயன்றபோது, நம் படையினர் அதை முறியடித்ததாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement