தேசிய டிஜிட்டல் கொள்கையொன்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும் எனவும் தெரியவந்துள்ளது.
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை
தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அறிஞர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வருட அனுபவமும் கொண்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக இங்கு வலியுறுத்தப்பட்டது.