இவங்கதாங்க டாப் 3 பிக்பாஸ் பைனலிஸ்ட்…முன்னணியில் இருப்பது யார்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது.  இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர்.

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியிலிருந்து இதுவரை மொத்தம் 10 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து இந்த வாரம் டாஸ்க்கில் மீதமிருக்கும் 11 போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் 66வது நாள் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவுகளாக ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இதில் வழக்கம் போல சண்டை, சச்சரவு அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பெறுவதற்கான டாப் 3 பைனலிஸ்ட்கள் யார், யாராக இருப்பார்கள் என ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ஏடிகே, விக்ரமன் எனவும், தனலட்சுமி அசீம் இருப்பார் என்றும் கூறுப்பாதை நாம் காணலாம். அதன்படி அசீம், விக்ரமன் இடையே இனி பயங்கரமான மோதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும்  ஷிவின், தனலட்சுமி இருவருமே டஃப் கொடுத்து விளையாடி வருகின்றனர். அதனால், அவர்களில் ஒருவர் கண்டிப்பாக இறுதிவரை செல்வார்கள் என்று நெட்டிசன்கள் கணித்து வர்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.