கத்தாரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் அசம்பாவிதம்


கத்தாரில் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்திலிருந்து விழுந்து பாதுகாப்பு காவலர் ஒருவர் உயிரிழந்ததார்.

சனிக்கிழமையன்று லுசைல் மைதானத்தில் ஜான் ஜாவ் கிபு (John Njau Kibue) எனும் பாதுகாப்பு காவலர் கீழே விழுந்ததாக கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை போட்டிகளை ஒருங்கிணைக்கும் உச்சக் குழு (Supreme Committee) தெரிவித்துள்ளது.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார், ஆனால் செவ்வாய்க்கிழமை இறந்தார் என்று உச்சக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்தது. அவர் எந் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உலகக்கோப்பை அமைப்பாளர்கள் வெளியிடவில்லை.

கத்தாரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் அசம்பாவிதம் | World Cup Final Lusail Stadium Qatar Worker Dies@Ansa

அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் அவர் கீழே விழு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாக அமைப்பாளர்கள் குழு கூறியுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த ஜான் ஜாவ் கிபுவுக்கு 24 வயது என்றும், கென்யா நாட்டைச் சேர்ந்த அவர் சனிக்கிழமை பணியில் இருந்தபோது, மைதானத்தின் 8-வது மடியிலிருந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செவ்வாக்கிழமை உயிரிழந்ததாக அவரது சகோதரி Ann Wanjiru தெரிவித்துள்ளார்.

அவர் தலைநகர் தோஹாவில் உள்ள Hamad பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்தார்.

தனது சகோதரர் மரணத்திற்கு நியாயம் வேணும் என்றும், சம்பவத்தன்று என்ன நடந்தது, அவர் எப்படி உயிரிழந்தார் எனும் முழு தகவலை தரக்கோரி அவரது சகோதரி Ann Wanjiru கேட்டுக்கொண்டுள்ளார்.

கத்தாரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் அசம்பாவிதம் | World Cup Final Lusail Stadium Qatar Worker DiesJohn Njau Kibue family

மைதானங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இறுக்கிக்கின்றனர், குறிப்பாக கென்யா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லுசைல் மைதானத்தில் (Lusail Stadium) சனிக்கிழமை எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இந்த மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.