கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மணவாரனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இந்த இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்திற்கு செல்ல கங்கமடுகு கிராமத்திலிருந்து குப்தா நதியை கடந்து செல்ல வேண்டும்.
இந்த கடந்த ஒரு வருடமாக குப்தா நதியில் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக ஆபத்தான நிலையில் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பயணம் செய்து அருகில் நகர பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்ர கனமழை காரணமாக ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் கடந்த ஒரு மாதங்களாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.
மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை மருத்துவ வசதி கூட இல்லாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்கு கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த ஒரு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் வந்து கிராம மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து பெற்றோர்கள் தனது குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் கிராம மக்கள் ஆற்றை கடக்க அரசு உடனடியாக தற்காலிக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.