சென்னை: கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஆவின் நிர்வாகம் 12 வகையான கேக்குகளை அறிமுகம் செய்து, விற்பனையைத் தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, ஆவினில் 12 வகையான கேக்குகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட் டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நவீன ஆவின் பாலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, கேக் வகைகளை அறிமுகப்படுத்தி, விற்பனையைத் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 12 வகையான கேக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளோம். பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில்,ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பிள் கேக்,ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், மேங்கோ கேக், ப்ளூபெர்ரி கேக், ஜெர்மன் பிளாக்பாரஸ்ட் கேக் ஆகிய வகைகளில்கேக்குகளை அறிமுகப்படுத்தியுள் ளோம். இவை 800 கிராம், 400 கிராம்மற்றும் 80 கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்கப்படும்.
ரூ.70 முதல் ரூ.800 வரை: ஆவின் கேக்குகள் விலை மற்ற நிறுவனங்களின் விலையை விடக் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மதுரவாயில் சட்டப்பேரவை உறுப்பினர் கணபதி, ஆவின் மேலாண்மை இயக்குநர் ந. சுப்பையன், இணை மேலாண்மை இயக்குநர் கே.எம் சரயு உட்பட பலர் கலந்து கொண்டனர். கேக் வகைகளின் விலை, குறைந்தபட்சம் ரூ.70 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை உள்ளது.