கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு வருமா? அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னைக்கு இரண்டாவது பேருந்து நிலையம் என்பது மிக முக்கிய தேவை என கருதி கடந்த ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் இரண்டாவது பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசும் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019-ல் துவங்கப்பட்ட பணிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணம் மற்றும் தொடர் மழை உள்ளிட்டவற்றையால் பணிகள் தாமதப்பட்டு வந்தாலும் அவற்றை விரைந்து முடிக்க முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை என்பதில் இருந்து 90 சதவீத பணிகள் முடிவு பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தாமோ அன்பரசன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை சந்தித்து அமைச்சர்கள் உடனடியாக இந்த பணிகளையும் முடித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர் .மேலும் சில மாற்றங்களை செய்யுமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், விரைவில் பணிகள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இருப்பதாகவும், கூடுதலாக இந்த இடத்தில் தொடர் வண்டியில் இயக்குவது பேருந்து இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் என முன்னாள் முயற்சி செய்த பொழுது புயல் மற்றும் மழையின் காரணமாக பணிகள் தொடர்ந்து தாமதம் ஆவதால் அது தடைபட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். எவ்வளவு விரிவாக பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமோ அவ்வளவு விரைவாக முடிக்கப்படும் எனவும் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.