டெல்லி: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மசோதா மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும். அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
