நாங்குநேரி கோர்ட்டில் ராக்கெட் ராஜா ஆஜர்

களக்காடு: நாங்குநேரி அருகே  மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமித்துரை (23), கடந்த ஜூலை 28ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். கோதைசேரியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கொலைக்கு பழிக்கு பழியாக சாமித்துரை கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பனங்காட்டு படை கட்சியை சேர்ந்த ராக்கெட் ராஜா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக  நாங்குநேரி கோர்ட்டில் ராக்கெட் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் 9 பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். மாதிஸ்திரேட் சிதம்பரம் வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.