ஹைதராபாத் தெலுங்கானாவில், பாறைகளுக்கு இடையில் சிக்கி மூன்று நாட்களாக தவித்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜு, கடந்த 13ம் தேதி அருகிலிருந்த வனப்பகுதிக்குச் சென்றார்.
அப்போது, இரு பாறைகளுக்கு நடுவில் ராஜுவின் மொபைல்போன் விழுந்து விட்டது.
இதை எடுக்க இடுக்கில் இறங்கிய அவர், போனை எடுத்த பின் அதில் வசமாக சிக்கிக் கொண்டார்.
நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் மேலே முடியவில்லை. இதையடுத்து, குடும்பத்தினருக்கு போன் வாயிலாக தகவல் தெரிவித்தார்.
அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ராஜு சிக்கியிருந்த இடத்துக்கு வந்தனர்.
அவர்களும் கடும் முயற்சி செய்த நிலையில், ராஜுவை மீட்க முடியவில்லை.
இதையடுத்து, அவர்கள்போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை, போலீஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இருந்து அதிகாரிகள் பலர் வந்தனர். நேற்று முன் தினம் காலையில், ராஜுவை மீட்கும் பணி துவக்கப்பட்டது.
அவரை பாதிக்காத வகையில், வெடிகுண்டுகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு, நேற்று மதியம் 2:00 மணிக்கு மீட்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ள ராஜு, நலத்துடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement