சமூக சேவைகள் திணைக்களமும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைத்திட்டம் தொடர்பில்,கேகாலை மாவட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் ஆரம்ப நிகழ்ச்சி (14) கேகாலையில் இடம்பெற்றது.
குறிப்பாக வளர் முக நாடுகளில் மாற்றுத்திறனாளி சமூகம் எவ்வாறு வேலையில் அமர்த்தப்படுகிறது மற்றும் இந்நாட்டு சமூகத்தில் ஏற்படும் இடையூறுகளை இனங்கண்டு இந்நிலைமையைக் குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்பன கலந்தாலோசிக்கப்பட்டன.
மேலும் கேகாலை மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்தில் அங்கவீனமுற்ற சமூகத்தினரை பணியமர்த்த கூடிய நிறுவனங்களை அடையாளம் காணும் விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.