வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சாட்டோகிராமில் முதல் டெஸ்ட் துவங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ‛பேட்டிங்கை’ தேர்வு செய்தார்.
அதன்படி முதல்நாளான நேற்று (டிச.,14) இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்திருந்தது. இந்திய தரப்பில் புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் 82 ரன்களும் எடுத்தனர்.

2ம் நாளான இன்று, ஸ்ரேயாஸ் 86 ரன்களில் போல்டானார். அடுத்து வந்த அஸ்வின் தன் பங்கிற்கு அரைசதம் கடந்து 58 ரன்னில் வெளியேறினார். குல்தீப் (40) ஓரளவு கைகொடுக்க இந்திய அணியின் ஸ்கோர் அதிகரித்தது. முகமது சிராஜ் 4 ரன்னில் கேட்சானார்.
இதனால் 133.5 ஓவர்களில் இந்திய அணி 404 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. உமேஷ் யாதவ் 15 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேச தரப்பில் தைஜூல், மெஹதி ஹசன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement