சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் 86 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் அஸ்வின் 58, ரிஷப் பண்ட் 46, குல்தீப் யாதவ் 40 ரன்களை எடுத்தனர்.
