72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தனது மகள் ஐஸ்வர்யா-வுடன் சென்று சுப்ரபாத தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பின்னர் பிற்பகல் 11:45 மணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் சென்ற ரஜினிகாந்த்-தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்தார்.

இருவரும் அங்குள்ள அமீன் பீர் தர்கா-வுக்கு சென்று வழிபட்டனர். இதனை முடித்துக் கொண்டு பிற்பகலில் அனைவரும் சென்னை வர திட்டமிட்டிருந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பு வேலை துவங்க இருக்கும் நிலையில் அவர் திருப்பதி சென்று வந்துள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.