Dhanush: யாரும் எதிர்பார்க்காதபோது குண்டை தூக்கிப் போட்ட தனுஷ், நயன்தாரா

இந்த ஆண்டு கோலிவுட்டையே அதிர வைத்த இரண்டு பேர்களில் தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் தான் முதல் இரண்டு இடங்கள் ஆகும்.

தனுஷ்2022ம் ஆண்டு நிறைவடைய இரண்டு வாரங்களே இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு கோலிவுட்டை அதிர வைத்த பிரபலங்கள் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாண்டு பிறந்த கையோடு கோலிவுட் பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிரிச்சி கொடுத்தவர்கள் தனுஷும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தான்.
பிரிவுகாதல் கொண்டேன் படம் பார்த்து தனுஷ் மீது காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். தங்களின் பிரிவு குறித்து ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஐஸ்வர்யாதனுஷ், ஐஸ்வர்யா வெளியிட்ட அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் ஏதோ கோபத்தில் இப்படி செய்துவிட்டார்கள். மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பினார்கள். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்த ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் கூட தோல்வி அடைந்தது. சேர்ந்து வாழ்ந்து சண்டை போடுவதை விட பிரிந்து நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போன்று.
நயன்தாராதனுஷை அடுத்து கோலிவுட் ரசிகர்களை அதிர வைத்தவர் நயன்தாரா. ஜூன் மாதம் 7ம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, அக்டோபர் 9ம் தேதி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானதாக அறிவிப்பு வெளியிட்டனர். திருமணமான வேகத்தில் குழந்தையா என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள். அதன் பிறகே வாடகைத் தாய் மூலம் தாயானது தெரிய வந்தது.
வாடகைத் தாய்நயன்தாராவுக்கு தாயாகும் பாக்கியம் இல்லை. இதையடுத்தே அவர் வாடகைத் தாய் முறையை நாடினார். ஆனால் அது எப்படி திருமணானவுடன் வாடகைத் தாயை அணுகலாம் என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழுவை அமைத்தது தமிழக அரசு. ஆனால் இப்படி எல்லாம் பிரச்சனை வரும் என்பது நயன்தாராவுக்கு தெரியாமல் இல்லை.
பதிவுத் திருமணம்தனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி சான்றிதழை அரசிடம் சமர்பித்தார் நயன்தாரா. மேலும் வாடகைத் தாய் வேறு யாருமல்ல தங்களின் நெருங்கிய உறவினர் தான் என்று விளக்கம் அளித்தார். நயன்தாரா தன் விருப்பப்படி வாடைகத் தாய் மூலம் தாயனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது. அவர் தற்போது தன் மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.