அஜித் செல்லும் இடமெல்லாம் மக்கள் அன்பான வரவேற்பு… இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றிவந்து #AK

நடிகர் அஜித் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக பைக்கில் பயணம் செய்து முடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவரும் எண்ணத்துடன் தனது பயணத்தை துவங்கியுள்ள அஜித் முதல்கட்டமாக இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.

அஜித் செல்லும் இடமெல்லாம் அவருக்கு அன்பான வரவேற்பு கிடைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்-துக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

துணிவு படப்பிடிப்பின் இடையே தனது பயணத்தை துவங்கிய அஜித் இப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தனது பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.