புதுடில்லி, புதுடில்லியில், இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைப்பற்றிய எலும்புகள் ஷ்ரத்தாவுடையது தான் என மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லியில் வசித்து வந்த அப்தாப் பூனேவாலா என்ற இளைஞர், தன்னுடன் ஒன்றாக வசித்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை நகரின் பல பகுதிகளில் வீசி எறிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத் தின் அடிப்படையில், புதுடில்லியில் பல இடங்களில் மனித எலும்புகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கரிடம் மரபணு சோதனைக்காக சமீபத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த மாதிரிகளையும், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட எலும்புகளையும் வைத்து மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில், விகாஸ் வாக்கரின் மாதிரியுடன், அந்த எலும்புகள் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், போலீசார் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வழக்கின் விசாரணை மேலும் வேகம் எடுக்கும் என தெரியவந்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement