டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவை சதவிகிதம் கடந்தாண்டை விட இந்தாண்டு 0.65 சதவீதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவை சதவிகிதம் முறையே 0.82 சதவீதம், 4.32 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் 487 தேர்தல் வழக்குகளும், 1,295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில உயர் நீதிமன்றங்களில் சுமார் 10,000 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திடம் உள்ளது.
நாட்டின் நீதித்துறையானது நிா்வாகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. கீழமை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு வந்தாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவை சதவிகிதம் கடந்தாண்டை விட இந்தாண்டு 0.65 சதவீதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.