திருவனந்தபுரம் :கேரளாவில் பட்டப்பகலில் 47 வயது பெண், அவருடன் வசித்த காதலரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராஜேஷ், 46, தன் குடும்பத்தை விட்டு, கடந்த 12 ஆண்டுகளாக வாழையிலா என்ற ஊரைச் சேர்ந்த சிந்து, 47, என்ற பெண்ணுடன், திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார்.
சமீபகாலமாக, இருவருக்கும் இடையே சண்டை கள் நடந்து வந்தன. இதனால், சிந்து வேறு வீட்டிற்கு மாறினார்.
நேற்று காலையில் சிந்து பயணித்த பஸ்சில் ராஜேஷ் ஏறினார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, இருவரும் ஒரே பஸ் ஸ்டாப்பில் இறங்கினர்.
பின் ராஜேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிந்துவை கொடூரமாக வெட்டினார். இதில் சிந்துவின் கழுத்து, தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிந்துவை மீட்டு மருத்துவமனைக்குக் எடுத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொலையாளி ராஜேஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement