ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கும் தினேஷ் ஷாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபாய் கொடுக்கல் வாங்கல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படுபவர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் இதற்கு முன்னர் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அவர் பொரளை மயானத்தில் காருக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்டவரின் கார், காசல் மருத்துவமனையின் நுழைவாயிலில் இருந்து, மயானத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.