தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 என்றும், அதனால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்க உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்ததுக்கு நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்ந்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், நடிகர் விஜய் முதன்முதலாக தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள ‘வாரிசு/வரசுடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் பெடம் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இதேபோல், ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ளப் படம் ‘துணிவு’. இந்தப் படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை உதயநிதியின் ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இரண்டு நடிகர்களுமே உச்ச நடிகர்கள் என்பதாலும், 8 வருடங்களுக்குப் பிறகு மோதுவதாலும் இரண்டு படங்களுமே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரண்டுப் படங்களுக்கும் சம அளவில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ‘துணிவு’ படத்தை கைப்பற்றியுள்ளதால், அதற்கு அதிக அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, “விஜய் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. சென்னைக்கு சென்று ‘துணிவு’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டுமென பேசப்போகிறேன். விஜய்யின் ஸ்டார்டம்மை (stardom) எண்ணிப் பார்க்க வேண்டும். இது பிசினஸ்” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நெட்டிசனகள் அவரை சமூகவலைத்தளப் பக்கங்களில் கலாய்த்து வருகின்றனர். நடிகர் அஜித் பற்றி விவேக் சொல்லும்போது எழும் கரகோஷம் உள்ளிட்ட வீடியோக்களையும் அதிகளவில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Dil raju now #Varisu pic.twitter.com/3KyOkb42va
— ᴮᶦᵍᶦˡ Ak (@AKjaiii) December 15, 2022
In TN No.1 Star is #ThalapathyVijay But out of 800 screens they are giving 400 & 400 equally.
Red Giant Releasing #Thunivu Majorly. #Vijay is bigger than #Ajith.He is in TOP position. So I gonna ask extra screens for #Varisu.
– Dil Raju pic.twitter.com/eBrC8AcGAV
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) December 15, 2022
Tamilnadu Biggest Superstar Thala Ajith Kumar 💥🤙
— Venkata Sai Chikkala (@VenkataSaiChik3) December 15, 2022
Any Doubt 😎#DilRaju #Varisu #Thunivu #Ajithkumar𓃵 #Thalapaathy67 #ThalaAjith #ThunivuPongal pic.twitter.com/wUREx7bifq