திண்டுக்கல்லில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு.!

திண்டுக்கல் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர் மற்றும் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திண்டுக்கல் மாவட்டமத்தில் உள்ள கோபால்பட்டி அருகில் வி.மேட்டுப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கணவன்-மனைவி சேர்ந்து இருப்பது போன்ற நடுகல் ஒன்றை அவர்கள் கண்டு பிடித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, “குளத்தின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கணவன்-மனைவி சேர்ந்தது போன்ற நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது.

இந்த நடுகல்லில் இடதுபுறம் உள்ள ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளிமுடிந்து சவரிகொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளைகுண்டலமும், இருகைகள் கும்பிட்ட நிலையிலும் காணப்படுகிறது.

அதேபோல் பெண் சிற்பத்தில் வலதுபுறம் கொண்டையும், காதில் வலைகுண்டலமும், மார்பில் ஆரமும், இடதுகை தொங்கியபடி டோலிமுத்திரையும், வலதுகாய் இடுப்பில் வைத்தபடியும் உள்ளது. 

இந்த நடுகல்லில் உள்ள ஆண் இந்தப் பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று மற்ற பகுதியிலும் வேறு ஏதஜாவது தொல்லியல் ஆய்வுகள் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.