மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தின் பந்தோல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பக்காரி கிராமத்தில், ஒரு பெண் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மற்ற பெண்களுடன் நடனமாடும்போது திடீரென மேடையில் சரிந்து விழுந்தார்.
மேடையில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் மேடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் சியோனியில் உள்ள பக்காரி கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் 4 பெண்கள் தரையில் நடனமாடுவது தெரிகிறது. அப்போது, பெண் ஒருவர் தரையில் விழுந்தார். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய பந்தோல் காவல் நிலையப் பொறுப்பாளர் திலீப் பஞ்சேஷ்வர், புதன்கிழமை இரவு பக்காரி கிராமத்தில் திருமண விழாவிற்கு முன்பு சாஹு குடும்பத்தில் கச்சேரி நடப்பதாக நாயுடுனியாவிடம் கூறினார். அப்போது, கச்சேரியில் பெண்கள் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தனர். நடனத்தின் போது 55 வயது பெண் ஜாதா பாய் திடீரென மேடையில் விழுந்தார். மக்கள் பார்த்ததும் அந்த பெண்ணை உடனடியாக சியோனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவரின் கூற்றுப்படி, பெண் மாரடைப்பால் இறந்தார். சோகமான சூழலில், பெண்ணின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் வியாழக்கிழமை செய்ததாக நிலையப் பொறுப்பாளர் பஞ்சேஷ்வர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.