சியோனி: மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் பகாரி கிராமத்தில் நடந்த திருமண விழாவில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையில் பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது 60 வயது பெண் ஒருவர் திடீரென மேடையில் சரிந்து விழுந்தார். அதிர்ச்சியடையந்த மக்கள், உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாகவும், இறப்புக்கான காரணம் திடீர் மாரடைப்பு தான் என்று மருத்துவர்கள் கூறினர். திருமண விழாவில் நடனமாடிய பெண் திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.