வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குவாலியர்: மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. அதில் இரு கால்கள் செயலற்று இருப்பதாகவும், அக்கால்களை அகற்றலாமா என குழந்தையை பரிசோதித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று (டிச.,16) பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவெனில், அப்பெண் குழந்தைகள் மொத்தம் 4 கால்கள் இருந்துள்ளன. குழந்தையும், தாயும் நலமுடன் இருந்தாலும், நான்கு கால்களுடன் குழந்தை பிறந்ததால், பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‛குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. குழந்தை 4 கால்களுடன் பிறந்தது மருத்துவ அறிவியலில், இஸ்கியோபகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் போது, உடல் பாகங்கள் இரண்டு இடங்களில் வளரும்.
இந்த பெண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் கூடுதல் இரண்டு கால்களுடன் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளது. உடல் உறுப்புகளில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதிக்கின்றனர். பரிசோதனைக்கு பிறகு குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், செயலற்ற இரண்டு கால்களும் அகற்றப்படும். இவ்வவாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement