மகிழ்ச்சியின் உச்சம்… : குட் நியூஸ் சொன்ன அட்லீ – பிரியா

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ‛ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என விஜய்யை வைத்து மூன்று படங்களை கொடுத்த இவர் தற்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீ கடந்த 2014, நவ., 9ல் தான் காதலித்து வந்த நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர்களின் ரொமான்டிக் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் இந்த தம்பதியர் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க உள்ளனர். அதாவது இருவரும் பெற்றோர் ஆக போகிறார்கள். பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ‛‛எங்களுக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம் ” என அட்லீ – பிரியா மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.