சபரிமலை சீசன் என்பதால் மீனவர்களின் நுகர்வு குறைந்தது: வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக தூத்துக்குடி மீனவர்கள் வேதனை..!!

தூத்துக்குடி: சபரிமலை சீசன் மற்றும் மார்கழி மாத பிறப்பு உள்ளிட்டவைகளால் மீன்களின் நுகர்வு குறைந்து. அதன் விலையும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகு மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். கடலில் மீன் வரத்து அதிகம் இருந்த போதிலும் சபரி மலைக்கு செல்வதற்காக ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மீன்களின் நுகர்வு குறைந்துள்ளது. வழக்கமாக ஒரு கூடை ரூ.1800 முதல் ரூ.2000 வரை விற்கப்படும் பாறை மற்றும் முரல் மீன்களின் விலை ரூ.600 முதல் ரூ.800 ஆக குறைத்துள்ளது. இதனால் உரிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சீலா மீன்கள் கிலோ ரூ.500 ஆகவும் விளமீன், உளிமீன்கள் கிலோ ரூ.250 விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.