புதுடில்லி, ‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரீசா’ எஸ்.யு.வி., காரில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே’, ‘ஸ்மார்ட் இன்போடெயின்மென்ட்’ அமைப்பில் ‘ஆண்ட்ராய்டு ஆட்டோ’ இணைப்பு, மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ‘டர்ன் பை டர்ன் நேவிகேஷன்’ என பல முக்கியமான வசதிகளை புதிதாக கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய மாடல் பிரீசா, கடந்த ஜூனில் வெளியிடப்பட்ட நிலையில், இது வரை 1.9 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக,எலெக்ட்ரிக் சன்ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அதிநவீன அம்சங்களும் இந்த காரில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement