திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்காக ஆண்டாள், ரெங்கமன்னார் குரடு மண்டபத்தில் நேற்று அமர்ந்துரூ.10 லட்சம் மதிப்புள்ள, 30 திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுச்சேலையை ஆண்டாள் அணிந்து, ரெங்கமன்னாருடன் காட்சியளித்தார். ஐகோர்ட் கிளை நீதிபதி ஆதிகேசவலு தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
