டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளியில் துவங்கியது. இந்த கூட்டத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளியில் பங்கேற்றுள்ளார்.
