காரைக்குடி: நீதித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பாலசுப்ரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் 15 பேரிடம் ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியத்துக்கு உடந்தையாக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.