பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று… கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம்


பிரித்தானியாவில் இதுவரை பல சிறுவர்களை பலி வாங்கியுள்ள Strep A தொற்றால் 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரத்தை, தாயார் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

நீண்ட கால பாதிப்பு

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், 8 வயது Luke Bates என்ற சிறுவன் தொடர்பில் அவரது தாயார் மனம் திறந்துள்ளார்.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் சிறுவன் Luke Bates-கு strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் சிறுவன் Luke Bates நீண்ட கால பாதிப்புகளை அனுபவித்து வருவதாகவும் தற்போது அவனுக்கு 15 வயது என்றாலும், சரிவர பாடசாலைக்கு செல்லும் நிலையில் அவன் இல்லை என்றே தாயார் கூறுகிறார்.

பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று... கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம் | Mother Tells 6 Year Ordeal Son Contracting Strep

SWNS

ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்ந்து வந்ததாக கூறும் சூசன் பேட்ஸ், கடந்த 6 வருடங்களாக வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் தமது மகன் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் அந்த தொற்று பாதித்தது எனக் கூறும் சூசன், பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் மருத்துவர்கள் உடனடியாக ஆன்டிபயாடிக் அளித்துள்ளனர், ஆனால் சிறுவனுக்கு இருமல் மட்டும் விலகாமல் நீடித்துள்ளது.

நடக்க முடியாதபடி உடல் ஸ்தம்பித்தது

2017ல் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததுடன், நடக்க முடியாதபடி உடல் ஸ்தம்பித்துள்ளது.
இரவானால் உடல் நடுங்கத் தொடங்கும், அதனால் சிறுவனால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 2017 ஏப்ரல் மாதம் மருத்துவர்கள் கூறிய தகவல் மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனுக்கு chronic fatigue syndrome பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குணப்படுத்த முடியாத ஒருவகை நரம்பியல் பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பரவும் அந்த தொற்று... கால்கள் ஸ்தம்பித்து முடங்கிப் போன சிறுவன்: ஒரு தாயாரின் பகீர் அனுபவம் | Mother Tells 6 Year Ordeal Son Contracting Strep

SWNS

மட்டுமின்றி, சிறுவனின் தொண்டையில் அப்போதும் விட்டுவிலகாமல் Strep A பாதிப்பும் காணப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு பின்னர், சிறுவன் உடல் அசைத்து லேசாக நடக்கவும் தொடங்கியுள்ளான்.

ஆனால் தொடர்ந்து பாதிப்புக்கு இலக்காகும் நிலையும் இருந்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான போராட்டங்களுக்கு நடுவே குணமடைந்து வந்ததாக தாயார் சூசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளாக தமது படுக்கையிலேயே தமது மகனை தூங்கவைத்து கவனித்து வருவதாக அந்த தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2021 ஏப்ரல் மாதம் முதல் லூக் பாடசாலைக்கு செல்ல துவங்கியுள்ளான். ஆனால் ஒருமணி நேரம் மட்டுமே அவனால் பாடசாலையில் செலவிட முடியும் என்ற நிலை உள்ளது என்கிறார் சூசன். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.