வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: கிமு 5 ம் நூற்றாண்டில் இருந்து சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் இருந்த 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கும் இந்திய பிஎச்டி மாணவர் ஒருவர் விடை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
சமஸ்கிருத மொழியின் தந்தை என போற்றப்படும் பாணினி, அந்த மொழிக்கான இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய இலக்கணம் தொடர்பான புதிர் ஒன்று மொழியியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி அதுல் ராஜ் போபட் என்பவர் பிஎச்டி படித்து வந்தார். சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்போது, பாணினி எழுதிய இலக்கண புதிர் குறித்து படித்தார். அந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரிஷி முயற்சி மேற்கொண்டார். துவக்கத்தில் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து முயற்சித்து அந்த புதிருக்கு விடையை கண்டுபிடித்தார்.
இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அந்த அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிருக்கு விளக்கம் கண்டுபிடித்து உள்ளார்.

சம வலிமை கொண்ட இரண்டு விதிகள் மோதும் போது, இலக்கணத்தின் தொடர் வரிசையில் பின்னர், தோன்றும் விதி மிகவும் துல்லியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால், புதிய வார்த்தைகளை தோற்றுவிக்கும்போது, இரண்டு விதிகளில் எது பிந்தையதோ, அதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற அல்காரிதத்தை ரிஷி அதுல் ராஜ் கண்டுபிடித்து 2,500 ஆண்டுகள் முந்தைய இலக்கண புதிருக்கு விடை கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement