அஜித்தைவிட லெஜண்ட் அண்ணாச்சிதான் ஒசத்தி – விஜய்யிடம் பணம் வாங்கினாரா ப்ளூசட்டை மாறன்?

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் மோதலுக்கு தீனி போடும் வகையில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.

என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாதுதானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப்போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார்” என கூறினார்.

அவரது இந்தப் பேச்சு கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் தில்ராஜுவை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இதனையடுத்து பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட தில்ராஜு, யாரையும் கிண்டல் செய்வதிலோ, நக்கல் செய்வதிலோ எனக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. மீடியா முன்பு பேசவே பயமாக இருக்கிறது என தனது கருத்திலிருந்து ஜகா வாங்கினார்.

இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் லெஜண்ட் சரவணா அண்ணாச்சி புகைப்படத்தை பகிர்ந்து ட்ரெய்லர் வியூஸ் 2022: தி லெஜண்ட் 32 மில்லியன், வலிமை 25 மில்லியன். அண்ணாச்சியின் பவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அஜித்தைவிட லெஜண்ட் அண்ணாச்சிதான் உயர்ந்த நடிகர் என ப்ளூசட்டை கூறவருகிறாரா. அஜித் பவர் என்னவென்று இந்த இண்டஸ்ட்ரியே அறியும். ஒருவேளை விஜய்யிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர் இவ்வாறு ட்வீட்களை பதிவு செய்கிறாரா எனவும் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த ட்வீட் சமூக தலைவளங்களில் மற்றொரு சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.