அஜித் பற்றி சொன்ன நல்ல விஷயங்களை மறைத்துவிட்டார்கள் : தில் ராஜு வருத்தம்

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் தில் ராஜு. இவர் தற்போது விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகியுள்ள வாரிசு என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாகிறது.

அதே சமயம் அஜித் நடித்த துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாவதாலும் அந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதிலும் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்கிற கருத்தை வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதுபற்றி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, துணிவு, வாரிசு இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானாலும், தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர். அவருக்கு இன்னும் அதிக அளவில் தியேட்டர்கள் கொடுக்கப்பட வேண்டும் இதுபற்றி தமிழகம் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச போகிறேன்” என்று கூறி இருந்தார். இவரது பேச்சு குறித்த வீடியோ கிளிப் ஒன்று சோஷியல் மீடியாவிலும் வெளியானது.

விஜய் தான் நம்பர் ஒன் என இவர் கூறியது சோசியல் மீடியாவில் அஜித், விஜய் என இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தை யுத்தத்தை துவங்கி வைத்துவிட்டது.

இந்த நிலையில் இந்த சலசலப்பு குறித்து கூறியுள்ள தில் ராஜு, “நான் அந்த நிகழ்வில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினேன். அதில் அஜித், விஜய் இருவர் பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவு கூறியுள்ளேன். ஆனால் இந்த 20 வினாடிகள் கொண்ட ஒரு கிளிபை மட்டும் வெட்டி சோசியல் மீடியாவில் வெளியிட்டு எனக்கு எதிராகவும், வாரிசு படத்திற்கு எதிராகவும் சிலர் செயல்பட்டு வருகின்றனர். முழு பேச்சையும் கவனித்தால் தான் நான் சொல்வது உண்மை என தெரியும்” என்று விளக்கம் அளித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.