உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.


உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.