ஜூபா : தெற்கு சூடானில் வங்கி அருகே நடந்த மோதலில், ஐந்து கொள்ளையர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில், இந்நாட்டின் மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது.
நேற்று, இந்த வங்கி அருகே, ஐந்து பேர் கும்பல் ஆயுதங்களுடன் வந்தனர். அப்போது, அவர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட் டனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்நாட்டு பெட்ரோலிய அமைச்சகத்தின் அருகில் நின்றிருந்த காரில் இருந்து பணத்தைத் திருடிய இந்த கும்பலை, பாதுகாப்பு படையினர் துரத்தி, வங்கி அருகே வைத்து துப்பாக்கியில் சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement