திருமலை: தெலங்கானா மாநிலம், மன்சிரியாலா மாவட்டத்தில் உள்ள மண்டமர்ரி அடுத்த குடிப்பள்ளி வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவய்யா(50). இவரது மனைவி பத்மா(45). இவர்களது உறவினர் சாந்தய்யா (50). பத்மாவின் அண்ணன் மகள் மவுனிகா(23), அவரது 3 வயதான ஹிமாபிந்து மற்றும் ஸ்வீட்டி. சாந்தய்யா சிங்கரேணி நிலக்கரி தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சாந்தய்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தில் இருந்து பிரிந்து சிவய்யா குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் வீட்டில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். சாந்தய்யா குடும்பத்தினருக்கும், சிவய்யா குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தீ விபத்தில் சாந்தய்யா குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
