வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் ஓட்டுகள் பெற்று, நாங்கள் காளை மாட்டிலேயே பால் கறந்துள்ளோம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், ” கடந்த ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டில்லி மாநகராட்சியை, பா.ஜ., விடம் இருந்து கைப்பற்றினோம். கோவாவில் இரு எம்எல்ஏக்கள் ஜெயித்தார்கள்.
குஜராத்தில் 5 எம்எல்ஏக்கள், 13 சதவீத ஓட்டுகள் பெற்றோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாமானியமானது அல்ல. சிலர் என்னிடம், நீங்கள் குஜராத்தில் பால் கறக்கும் காளையை எடுத்து வந்துள்ளீர்கள் என பாராட்டினர். அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது. பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும்.

ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம். வரும் 2027ம் ஆண்டு நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
82 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை பிடித்தது. அதேவேளை புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது. இந்த முறைதான் குஜராத் தேர்தல் போட்டியில் மும்முனை போட்டி நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement